Thursday, 10 October 2013

மதுவிலக்கை வலியுறுத்தி 12 லட்சம் பேரிடம் கையெழுத்து: இளைஞர் காங்கிரசார் தொடங்கினர்

தமிழக இளைஞர் காங்கிரசார் தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை
வலியுறுத்தியும், மதுக்கடைகளை மூடக் கோரியும் கையெழுத்து இயக்கம்
நடத்துகின்றனர்.
சென்னை கடற்கரை காந்தி சிலை முன்பு இன்று காலையில் இதை தொடங்கினர். நிகழ்ச்சிக்கு மாநில துணைத் தலைவர் விஜய இளஞ்செழியன், தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் அனு ராதா அபி முன்னிலை வகித்தார்.
இந்த கையெழுத்து இயக்கம் மாநிலம் முழுவதும்
அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் இன்று தொடங்கியது.
குறைந்த பட்சம் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 ஆயிரம் பேர் வீதம் சுமார் 12 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்க முடிவு செய்துள்ளனர்.
கையெழுத்து இயக்கம் நிறைவு பெற்றதும் வருகிற 15–ந்தேதி சென்னை கோட்டை நோக்கி பேரணி நடத்துகிறார்கள். பேரணி முடிவில் கையெழுத்து கோப்புகளை முதல்–அமைச்சரை சந்தித்து கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள் தனசேகர், ஜீவன், அரிகிருஷ்ண ரெட்டி, துணை தலைவர்கள் பிரேம்குமார், ரஞ்சித்குமார், ஆசிஸ்தாமஸ், ஸ்ரீராம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment